ஹெர்பல்ஹேர் ஆயில் தயாரிப்பு தொழில் யார் யார் தொடங்கலாம்
ஹேர் ஆயில் தயாரிப்பு தொழிலானது யார் வேண்டுமானாலும் தொடங்கலாம்.முக்கியமாக வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் பெரியவர்கள் கூட இந்த ஹேர் ஆயில் தயாரிப்பு செய்து அதிக லாபம் பெறலாம்.
நாம் இந்த ஹேர் ஆயில் தொழில் செய்ய முடியுமா? செய்ய யாராவது உதவி செய்வார்களா? உண்மையாகவே இதில் லாபம் அதிகமாக கிடைக்குமா? இவ்வாறு உங்களுக்குள் இருக்கக்கூடிய இந்த கேள்விகளுக்கு இந்த பதிவு உங்களுக்கு முழு விடையாக அமையும்
ஹெர்பல்ஹேர் ஆயில் அதிகமாக தேவை இருக்கிறதா?
ஒரு தொழில் ஆரம்பிக்கும் பொழுது அந்த பொருட்கள் மீது மக்களுக்கு ஈடுபாடு எவ்வளவு உள்ளது என்பதை விரிவாக தெரிந்து கொண்டு தொழிலில் இறங்க வேண்டும், அதாவது இந்த ஹேர் ஆயில் தொழிலைப் பொறுத்தவரை பெண்கள் நாள்தோறும் தனது தலை முடி பிரச்சனையை அதிகமாக சந்திக்கிறார்கள் மேலும் இந்தத் தொழில் பெண்களை மையமாகக் கொண்டுள்ளதால் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் அதிக லாபம் பார்க்கலாம்.
ஹெர்பல்ஹேர் ஆயில் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் , அளவுகள் மற்றும் விலை
No | மூலப் பொருட்கள் | அளவு | விலை |
1 | தேங்காய் எண்ணெய் | 10 Ltr | ₹2000 |
2 | சோற்றுக் கற்றாழை | 20 nos | ₹200 |
3 | வெந்தயம் | 250 g | ₹20 |
4 | துளசி இலை | 50 nos | ₹50 |
5 | மருதாணி இலை | ¾ kg | ₹370 |
6 | செம்பருத்தி இலை | ½ kg | ₹100 |
7 | கருவேப்பிலை | ½ kg | ₹180 |
8 | சின்ன வெங்காயம் | ¾ kg | ₹60 |
9 | மிளகு | 100 g | ₹130 |
10 | செம்பருத்தி பூ | 50 nos | ₹50 |
11 | மலை நெல்லிக்காய் | 50 nos | ₹50 |
Total | ₹3210 | ||
எப்படி ஹேர் ஆயில் தயார் செய்வது
முதலில் 20 கற்றாழையை கையில் எடுத்து அதனை நடுப்பகுதியில் வெட்டி அதனுள் வெந்தயத்தை முடிந்த அளவு உள்ளே வைக்க வேண்டும் படத்தில் காட்டியவாறு
(அடுப்பு இப்போதைக்கு ஆன் செய்ய வேண்டாம்)
மேலும் 10 கைப்பிடி துளசி இலை , 100 முதல் 150 வரை செம்பருத்தி இலை 10 கைப்பிடி கருவேப்பிலை 70 சின்ன வெங்காயம் (உரலில் அல்லது மிக்ஸியில் மசித்து எடுக்கவும்) 50 நெல்லிக்காய் (விதை நீக்கி மசித்து கொள்ளவும்) 100 முதல் 150 மிளகு இவை அனைத்தையும் சேர்த்த பிறகு மீதமுள்ள 10 லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்
இப்போது ஸ்டவ் அடுப்பு ஆன் பண்ணவும், ஆன் பண்ணி ஐந்து நிமிடங்கள் கழித்து எண்ணெய் சூடானதும் ஸ்டவ் அடுப்பை மிதமான சூட்டுக்கு வைத்துக் கொள்ளவும்
இந்த மிதமான சூட்டிலேயே அவ்வப்போது கிளறி கொள்ளவும், மேலும் ஒரு ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள் கொதித்து வெள்ளைமுறை கூடி வரும். இதனுடைய பக்குவம் தண்ணீர் போல இருக்கும், பயப்பட வேண்டாம்.
இருக்கிற தண்ணீர் ட்ரை ஆகுற வரைக்கும் கிளறிக் கொண்டே இருக்கவும்,இந்த நேரத்தில் செம்பருத்தி பூ 200 காம்பு மற்றும் அதன் மேலிருக்கும் உள்ளிருக்கும் பூ அதையும் எடுத்துவிட்டு இதனோடு சேர்த்து கிளறவும்.
எண்ணெயில் போடப்பட்டுள்ள பொருட்கள் மொறுமொறுவென மாற வேண்டும், அதாவது கையில் எடுத்து உடைத்தால் உடைய வேண்டும். இந்தப் பக்குவம் வந்ததும் ஸ்டவ் அடுப்பை ஆப் செய்து கடாயை இறக்கவும், இப்போது என்னை பார்த்தால் பிரவுன் கலரில் இருக்கும்
இதுதான் சரியான பக்குவம்
இதை அப்படியே கடாயிலேயே இரண்டு நாட்கள் விட்டு விடுங்கள், இப்போது எடுத்து அதனை வடிகட்டி மூலம் வடிகட்டவும்.
10 லிட்டர் என்னைக்கு குறைந்தது 9.5 லிட்டர் ஹெர்பல் ஹேர் ஆயில் கிடைக்கும்.
எப்படி ஹெர்பல் ஹேர் ஆயில் விற்பனை செய்வது
ஹெர்பல் ஹேர் ஆயில் பொறுத்தவரை 100ml, 200ml ,500ml ,1 லிட்டர் பாட்டில் கண்டெய்னர்கள் ஆன்லைனில் கிடைக்கிறது அதனை வாங்கி அதனை அழகாக பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.பேக்கிங் செய்ய தேவையான பொருட்கள்
9.5 லிட்டர் பேக்கிங் செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று பார்த்தால்,- Packing Container 95 எண்ணம் 100 ml அல்லது
( 48 எண்ணம் 200ml ) அல்லது( பத்து எண்ணம் 1 லிட்டர்) = ₹ 475
- Sticker = ₹400
- Packing Cardboard box : ₹800
Total = ₹1675
மொத்த செலவுகள்
கண்டெய்னர் + பேக்கிங் செலவுகள் = ₹1675
எரிபொருள் + மற்ற செலவுகள் = ₹ 200
டிரான்ஸ்போர்ட் + ஆள் செலவு = ₹ 715
மூலப் பொருட்கள் செலவு = ₹ 3210
ஆக மொத்தம் செலவுகள் = ₹ 5800
ஹெர்பல் ஹேர் ஆயில் தற்போதைய சந்தை மதிப்பு
100 ml =₹ 260
200 ml = ₹400
1 litre = ₹1600
10 லிட்டர் எண்ணெய் தயாரித்து விட்டால் எவ்வளவு லாபம் கிடைக்கும்
10 லிட்டர் எண்ணெய் தயாரித்தால் நமக்கு கிடைப்பது 9.5 லிட்டர் மட்டுமே, இதனை நாம் 100ml ,200ml ,1 லிட்டர் என்ற அளவில் நாம் லாபகணக்கை கீழே வகைப்படுத்துகிறோம்.9.5 litre Hair Oil Profit Calculation ( include Packing and Transfort ) | |||
Quantity | 100 ml | 200 ml | 1 litre |
Container × Market price | 95 × ₹ 260 | 48 × ₹ 400 | 9.5 × 1600 |
Sale Price | ₹ 24700 | ₹ 19200 | ₹ 15200 |
Expenses முதலிடு | ₹ 5800 | ₹ 5800 | ₹ 5800 |
நிகர லாபம் | ₹ 18900 | ₹ 13400 | ₹ 9400 |
நீங்கள் 9.5 லிட்டரை 100ml 200ml 1 லிட்டர் இந்த மாதிரி கலந்து விற்கும் பொழுது இந்த நிகர லாபம் கண்டிப்பாக மாறுபடலாம், எனினும் இந்த ஹெர்பல் ஹேர் ஆயில் தொழிலில் லாபம் கண்டிப்பாக தரும்.





















